Saturday, March 15, 2014






ஒரு மில்லி செகண்டின் மதிப்பை
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்

ஒரு செகண்டின் மதிப்பை
விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்

ஒரு நிமிடத்தின் மதிப்பை
தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்

ஒரு மணி நேரத்தின் மதிப்பை
உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்

ஒரு நாளின் மதிப்பை
அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்

ஒரு வாரத்தின் மதிப்பை
ஒரு வார பத்திரிக்கையின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்

ஒரு மாதத்தின் மதிப்பை
குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்

ஒரு வருடத்தின் மதிப்பை
தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்

ஒரு வாழ்வின் மதிப்பை
நேரத்தைத் தவற விடுபவரையும்; தாரத்தைக் கதற விடுபவரையும் கேட்டால் தெரியும்..!

பார(தீ)தி



 யார் என்று புரிகிறதா

       

இவன் தீ (பாரதீ) என்று தெரிகிறதா




தடைகளை வென்றே




சரித்திரம் படைத்தவன்




நியாபகம் வருகிறதா








யாருக்கும் அடிமை இல்லை




இவன் யாருக்கும் அரசன் இல்லை




காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுது




காட்டுக்கும் காயம் இல்லை
                             நல்ல பெயர்




ஒரு நாய் கடைக்கு வந்துச்சு. . .

கடைக்காரர் விரட்டிவிட்டார்,

திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு...

என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா

அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார்.

நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது. . .

கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்.

அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.

அப்போது ரெட் சிக்னல். அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது...

பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது...

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை...

அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார்...

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது..

ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன்நாய் பேருந்தில் ஏறியது...

கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்...

இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்துஇறங்கியது...

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது...

கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...

நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்...

கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க! ஏன் அடிக்கறீங்க?

அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே.???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.

நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு.

# # # #
நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.

நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது
.

Tuesday, March 11, 2014


மாற்றுத் திறனாளிகளுக்கு சமர்பணம்



Friday, March 7, 2014




              செல்பேசியில் பேசும் இன்றைய குழந்தைகளுக்கு தெரியாது

                      சிட்டுக்குருவி என்ற அழகிய பறவையினம் இருந்தது !?!

                        
                     

Thursday, March 6, 2014

அனைத்தும் அறிந்தவன் ஞானி. 
அதை அறியாமல் கேட்பார்கள் அவரிடம் சில பேர் யார் நீ....

                                நேசிக்கும் முன் யோசி

                           நேசித்த பின் யோசிக்காதே......



ஆயிரம் தோல்விக்கு பின் வரும் ஒரு வெற்றி ஆயிரம் தோல்விகளையும் மறைத்து விடும் .... 
ஆயிரம் கஷ்டம் மனதில் இருந்தாலும் குழந்தையின் முகம் பார்த்தால் அனைத்தும் மறந்து போகிறது....



ஆரஞ்சு மிட்டாயின் சுவை Alpenliebe சாப்பிடும் இன்றைய குழந்தைக்கும் தெரிந்திருக்கு போலும்



இங்கே பல பேர்
பிறரை மாற்றிக்கொள்ள 
புத்தி சொல்கின்றனர் .
ஆனால்,
தன்னை மாற்றிக்கொள்ள 
யாருமே நினைப்பதில்லை.
பிரிவும் கோபமும் 
ஒருவரை மறப்பதற்கு அல்ல..
அவர்களை
அதிகமாக நினைப்பதற்கு
உன்மையான அன்பிற்கு 
ஏமாற்ற தெரியாது
ஏமாற மட்டுமே தெரியும்
             
            



          


                      நண்பர்கள் கிடைப்பது எளிது...



                     ஆனால் அவர்கள் அனைவரும் 



                      நல்லவர்களாக இருப்பது அரிது.....



வெற்றிக்கான குறுக்கு வழிகள் எதுவும் இல்லையா.................???

தோல்வி - வெற்றிக்கான வழி............
20 வருடங்கள் வளர்த்த பெற்றோரை 20 நிமிடங்கள் கூட யோசிக்காமல் உதறி செல்கின்றனர்... "சும்மாவா சொன்னாங்க மனம் ஒரு குரங்குனு
பூக்கள் உதிர்ந்து விழும்
என்பதற்காக
மரங்கள் வருத்தப்படுவதில்லை.

தென்றல் நின்று போகும்
என்பதற்காக
மலர்கள் வருத்தப்படுவதில்லை.

நிலவு தேய்ந்து விடும்
என்பதற்காக
வானம் வருத்தப்படுவதில்லை.

பிறகு
ஏன் மனிதா!
நீ மட்டும் தோல்வி கண்டு
துவண்டு போகிறாய்?

மனிதனுக்கு கற்றுத்தந்த விலங்குகள்....


உடம்பையே வளர்க்காதே 
நம்பிக்கையையும் வளர் 
யானை

காப்பவனை காப்பாற்று 
கற்றுதந்தது 
நாய்

குறிக்கோளுடன் வாழ்
தன்னிலை இழக்காதே
புலி

வாழ்க்கை ஒரு சுமை
அழாமல் சுமந்துகொள்
கழுதை

உழைக்காமல் சாப்பாடு
மெத்தையில் தூக்கம்
பூனை

கற்றுக்கொள்


தோல்வியை கற்றுக்கொள், 
வெற்றிக்கு முன்.

மறக்க கற்றுக்கொள், 
நினைக்கும் முன்..

ஏமாற கற்றுக்கொள், 
எதிர்பார்க்கும் முன்...

என் ஆசிரியர்கள்

கை எடுத்து வணங்குகிறேன் .

நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன் . 

நான் வாழ ! நான் முன்னேற ! 

எனக்காக உழைத்தவர்கள். 

நான் இன்று இன்பம் காண 

அன்று துன்பம் பொறுத்தவர்கள்,

நான் முத்து சேர்க்க

மூச்சடக்கி முத்து குளித்தவர்கள்,

என் இளம் வயதில்

நான் கண்ட நடமாடும் தெய்வங்கள் !

...........என் ஆசிரியர்கள் ...........

ஆசை

உன் நினைவுகள் இல்லாத இடங்களில் 
இருக்க ஆசை .. 
அங்கு தான் நிம்மதி 
நிரம்பிவழியும் என்பதால் அல்ல.. 
அங்கேயும் உன் நினைவுகளை 
நிரப்பிவிட வேண்டும் என்பதால்.. !

சந்தோஷம்


எப்போதெல்லாம் 
உன் மனம் 
வலிக்கிறதோ.............. 
அப்போதெல்லாம் 
உன்னை நேசிக்கும் 
உள்ளத்திடம் பேசிபார் 
அவர்களின் அன்பு 
உன்னை 
சந்தோஷபட வைக்கும்......
“கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால்... 
போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்..!”
எத்தனை ஐென்மங்கள் நான் உன்னை சுமந்தாலும் நீ சுமந்த பத்து மாதத்திற்க்கு ஈடாகுமா!!!!!!!!!!!
அம்மாவுடனான சண்டையை முடிவுக்கு கொண்டுவர "பசிக்குதும்மா" என்ற வார்த்தையே போதுமானது
இது உண்மை கதை.. 

நேற்று நான் கேட்ட நிஜம். ஒரு அம்மாவின் குமுறல் ..... 

நேற்று நான் ஒரு பாட்டியை சந்தித்தேன். பாட்டி கொஞ்சம் கால் ஊனமானவங்க. ஊன்றுகோல் இல்லாம அவங்களாள நடக்க முடியாது.ஊன்றுகோல் தவற விட்டதால் எனக்கு அவர்கள் அறிமுகம் கிடைத்தது . நான் பாட்டியிடம் பேச்சு கொடுத்தேன் .அவங்க பேச பேச என் கண்ணில் கண்ணீரும் மனதில் கோபமும் வந்தது. இதை நான் கோபத்தோடு பதிவு செய்கிறேன். இனி பாட்டி என்னிடம் கூறியதை கூறுகிறேன் ....

என் பெயர் ராஜலட்சுமி . சொந்த ஊர் கும்பகோணம் .எனக்கு 22 வயதில் ராமகிருஷ்ணன் என்பவரை கல்யாணம் செய்து வைத்தார்கள். சென்னையில் அவர் ஒரு பலகார கடை.வைத்து இருந்தார். கல்யாணமாகி 15 வருடம் எங்களுக்கு குழந்தை இல்லை. பின்பு ஒரு மகன் பிறந்தான். ராகவன் என்று பெயர் வைத்தோம். நன்றாக போனது வாழ்க்கை. ராகவனுக்கு முன்று வயது இருக்கும் போது ஒருவிபத்தில் என் கணவர். இறந்தார் . எனக்கு ஒரு கால் ஊனமானது.அதன் பின்பு என்தாய் அரவனைப்பில் சில காலம் இருந்தோம் .

என் தாய் மறைவிற்குப் பின சென்னை வந்தேன் பிழைப்பு தேடி. என் கணவர் வீட்டு சொத்தில் ஒரு ஓட்டு வீடு கிடைத்ததது. சரி தங்க இடம் இருக்கு வேலைக்கு போகலாம்னு நினைத்தால் என் கால் ஊனம் என்பதால் எந்த வேலையும் கிடைக்கவில்லை .மனம் நொந்த சமயத்தில் என் பக்கத்துவீட்டு மாமி வடகம் போட்டு விற்றார்கள். அதில் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்தது . அதை பார்த்து நானும் அதே தொழிலை செய்ய தொடங்கினேன் . ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். பிறகு போக போக கொஞ்சம் முன்னேறினேன் தொழிலில் .

ராகவன் பள்ளி சென்றான் . வகுப்பில் முதலிடம் வந்தான். நானும். என்னால் முடிந்ததை எல்லாம் வாங்கி கொடுத்தேன் . பத்தாம் வகுப்பில் பள்ளியில். இரண்டாவதாக வந்தான். 12 ம் வகுப்பில் முதல் மாணவனாக ் வந்தான் . அவன் டாக்டர் படிக்க ஆசை பட்டான். ஆனா கிடைத்தது இன்ஜினியரிங். அதையும் கஷ்டபட்டு படிக்கவைத்தேன் . முன்றாம் வருடம் Term fees. கட்டுவதற்கு பணம் இல்லாத்தால் வீட்டை விற்று படிக்க வைத்தேன் . முடித்த உடனே வேலை கிடைத்தது ஒரு கம்பியூட்டர் கம்பெனில ஜாயின் பன்னினான் . நல்ல சம்பளம். என் மனதில் சந்தோஷம் . நம் கஷ்டம் குறைய போகுதே என்று .நன்றாக ஒரு வருடம். போனது. திடீரென ஒரு நாள் நான் அமெரிக்கா போக போறேன் என்று கூறினான் . நான் வேண்டாம் என்று கூறினேன் அதற்கு அவன் அழுது என்னை சம்மதிக்க வைத்தான் . அமெரிக்கா போனான் . வாரம். ஒரு தடவை போன் பன்னினான் . ஆறு மாதம தான் என்று சொன்னவன் இரண்டு வருடம் வரை வரவில்லை . வாரம். ஒரு முறை. போன் பன்னினவன் மாதம் ஒரு முறை. பன்னுவதற்கே யோசித்தான்.

இப்படியே போய் கொண்டிருந்த என் வாழ்க்கையில் ஒரு நாள் பேரிடியாய் ஆனது அந்த நாள் . ஆம் எனக்கு ஒரு நாள் உடம்பு சரியில்லை அதனால் ஆஸ்பத்திரி போனேன் அங்கு டாக்டர் வர லேட்டாகும் என்று் கூறினார்கள் . சரி நான் அதுவரை அருகில் உள்ள கோவிலுக்கு செல்லலாம் என்று நினைத்து சென்றேன் . அங்கு சாமி கும்பிட்டு வெளியே வந்தேன். அப்போது ஒரு கார் வந்து நின்றது எனக்கு எதிரில் . அதில் இருந்து இருவர் இறங்கினர் . நான் அவர்களை பார்த்ததும் என்னால் பேச முடியவில்லை . ஏன் என்றால் நான் என் மகன். ராகவனை பார்த்த மகிழ்ச்சியில் . அதே சமயம் அவர்கள் என்னை நோக்கி நடந்து வந்தார்கள் நான் கண்ணீர் மழ்க நின்றேன். ஆனால் என்னை கானாது என்னை கடந்து அருகில் உள்ள ஹோட்டலுக்கு சென்றார்கள் . நான் பின்னாடியே சென்றேன் . ஆனால் அது மிக பெரிய ஹோட்டல், அதனால். காவலாளி நான் எவ்வளவு கெஞ்சியும் உள்ளே விடவில்லை . நான் வாசலிலே நின்றிருந்தேன் இரண்டு மணி நேரமாக. கடைசியில் வெளியே வந்தான் ராகவனும் அவன் கூட வந்த பொண்ணும் நான் ஓடி சென்று அவனை ஆர தழுவி அழுதேன். ஏன்டா நீ எப்படி இருக்க? எப்போ வந்த? என்று கேட்டேன் அதற்குஅவன் அம்மா இந்தாருங்கள் என்று ஒரு 100 ரூபாய் நோட்டை என்னிடம் கொடுத்துஎன் கையை விடுவித்து அந்த பெண் கை கோர்த்து கார் நோக்கி வேகமாக சென்றான் . நான் ராகவா ராகவா அழைப்பதை உதாசீனம் படுத்திவிட்டு சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த பெண் அவனிடம் யார் ராகவ் அது என்று கேட்க அதற்கு அவன் கூறிய பதில் , அவர்கள் எங்க வீட்டு வேலைக்காரி . அப்போ அப்போ பணம் வேண்டும் என்றால் இப்படித்தான் பண்ணுவா வா நாமா சிக்கிரம் போய்டலாம் இல்லை என்றால் மறுபடியும் வந்துவிட போறா என்று கூறி கொண்டே கார் ஏறி சென்றுவிட்டான் . இதை கேட்ட நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன் அப்படியே நடை பிணமாக வீட்டுக்கு சென்றேன் .

அதை நினைத்து நினைத்து அழுதேன் இரவு முழுவதும் . காலை எழுந்து அவன் வேலை பார்க்கும். கம்பெனிக்கு சென்றேன் . அங்கு விசாரித்த போது தான் பல உன்மைகள் வெளிவந்தது . அவன் அங்கு வேலையை விட்டு போய் ஏழு மாதங்கள் ஆனதும் அவனுக்கு திருமணம் ஆகி ஆறு மாதங்கள் ஆனதும் அவன் மாமனார் வீட்டில் தான் ஒரு அனாதை அம்மா அப்பா ஒரு பிளைட் விபத்தில் இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளான் இதை கேட்ட ்.நான் சாகவில்லை அவ்வளவு தான். ஒரு நடை பிணமாக. வாழ்ந்து வந்தேன். அதன் பிறகு யோசித்தேன் நாம் ஏன் அழ வேண்டும் நான் அவன் தயவில் வாழவில்லையே அவன் தான் என் தயவில் வாழ்ந்து வந்தான் நாம் ஏன் அழ வேண்டும் அவன் செத்து ஏழு மாதங்கள் ஆகி விட்டது என்று நினைத்து கொண்டேன். மறு நாள் இருந்து என் வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன் . என்னால் வீட்டில் தனியாக இருக்க முடியவில்லை . அதனால் அருகில் உள்ள முதியோர் ஆசிரமத்தில் சேர்ந்து கொண்டேன் . அங்கும் சென்று வடகம் தயாரித்து விற்று வருகிறேன் . என் செலவு போக மீதி இருக்கும் தொகையை அருகில் உள்ள ஆரம்ப ப்பள்ளியில். படிக்கும் குழந்தைகளின் கல்வி செலவுக்கு தருகிறேன என்று கூறி முடித்தார்கள்

. அப்போது ஒரு சிறுவன் ஓடி வந்து பாட்டி இந்தாருங்கள் உங்க கம்பு என்று குடுத்தான். பாட்டி அந்த கம்பை பார்த்து என்னிடம் கூறினார்கள் “உயிரற்ற மரம் கூட என்னை பிரிய மாட்டிக்குது.உயிருள்ள ஜடம் ஓடி போயிருச்சு” என்றார்கள்.

நான் அவர்களிடம் கேட்டேன் ஏன் பாட்டி அதற்கு அப்புறம் உங்களை பார்க்க உங்கள் மகன் வரவில்லையா என்று. இல்லை வரவே இல்லை என்று கண்ணீர் மழ்க கூறினார்கள் . எப்போதாவது நீங்கள் அவனை ( அவனுக்கு மரியாதை தர மனது ஒத்துக்கவில்லை) பார்க்கவில்லையா பாட்டி என்று கேட்டேன். அதற்கு பாட்டி கூறினார்கள் பார்த்தேன் ஒரு நாள் கோவிலில் ஆனால் என்னை பார்த்ததும் பதுங்கி பதுங்கி சென்றுவிட்டான் . நான் கேட்டேன் ஏன் பாட்டி வருத்தம் இல்லையா உங்களுக்கு இப்படி உங்கள் மகன் உங்களை கைவிட்டது என்று. அதற்கு பதில் கூறவில்லை கண்களில் கண்ணீர் மட்டும் தாரை தாரையாய் வந்தது . அதற்கு மேல் என்னாலும் ஆழாமல் இருக்க முடியவில்லை . ஒரு 5 நிமிட நேர மவுனத்திற்கு பிறகு நான் கிளம்புறேன்பா என்று கிளம்பிய பாட்டிக்கு என்னால் முடிந்த ஒரு தொகை குடுத்தேன். அதற்கு பாட்டி கூறினார்கள் இதை உன் தாயிடம் குடு அது தான் எனக்கு பன்னும் மிக பெரிய உதவி என்றார்கள் .

நான் பாட்டியிடம் ஒரு புகைப்படம் எடுக்கலாமா என் மொபைலில் என்றேன் அதற்கு புகைப்படம் எடுத்தால் என் ஆயுள் குறைந்துவிடும் நான் இன்னும் சில காலம் வாழ ஆசைப்படுகிறேன் எனக்காக அல்ல என்னால் பயன் பெறும் அந்த ஆரம்பப்பள்ளி குழந்தைகளுக்காக என்று கூறி விட்டு என்னை ஆசிர்வதித்து ஊன்று கோல் ஊன்றி வேகமாக நடந்து சென்றார். நான் அவர்கள் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்துவிட்டு கனத்த இதயத்தோடு அவ்விடத்தை விட்டு கிளம்பினேன் கலங்கிய கண்களோடு!!!!
தயவுசெய்து தாயை புறக்கணிக்காதீர் காலம் மாறும் காட்சிகளும் மாறும் ஆயிரம் தெய்வங்களிள் முதன்மை ஆனவள் தாய் அவளை வணங்கு முதலில் . ராகவன் போல பல பேர் பல விதமாக தாயை கைவிடுகிறார்கள் . அவர்களை நாமும் இந்த சமுதாயத்தில் புறக்கணிப்போம் . தயவுசெய்து இந்த பதிவை பகிர்ந்து ராகவன் போல ஆட்களுக்கு செருப்படி கொடுங்கள் சொற்களின் மூலம்.!!!!!!!

---sri---
தாய் தந்தையை ஏமாற்றுபவன் தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான்...
பருவநிலை மாறுவதற்கு கூட சில நேரமோ காலமோ தேவை. ஆனால் மனிதனின் மனநிலை மட்டும உடனே் மாறிவிடுகிறது ஏனோ!!!!

மரக்கால் :


கால் வலித்தது, 
ரிக்சாவில் ஏற்றினேன்... 
மனம் வலித்தது, 
ஓட்டியவனுக்கு ஒருகால் 
மரக்கால்!!!!!!

கற்றுக்கொள் :


தோல்வியை கற்றுக்கொள், 
வெற்றிக்கு முன்.

மறக்க கற்றுக்கொள், 
நினைக்கும் முன்..

ஏமாற கற்றுக்கொள், 
எதிர்பார்க்கும் முன்...

மாற்றுத் திறனாளிகளுக்கு சமர்ப்பணம் :-


வாயின்றி மலர் சிரிக்கும்......! 
வாலின்றி மனம் தாவும் .......! 
காலின்றி நதி நடக்கும் ..........! 
கையின்றி காற்று தழுவும் ...! 

விரலின்றி காதல் மீட்டும்.....! 
விழியின்றி கடவுள் காணும்..! 
செவியின்றி மலைஎதிர் ஒலிக்கும்...! 
சிறு மூளையின்றி " நான் " என்பதெழும்..!

நாசியின்றி நம்பிக்கை சுவாசிக்கும்...!
நரம்பின்றி தமிழ் மன யாழிசைக்கும்...!
நாவின்றி நினைவு தமிழ் சுவைக்கும்...!
நல்லுயிரின்றி மரத்துண்டு பயன் அளிக்கும்...!

எனவே.......

தேக நிறைவு தேவை இல்லை
தெய்வ குணம் போதுமானது.....!

உள்ளம் ஊனம் இல்லை எனில்
உலகை வெல்ல தடைகள் ஏது...?
அம்மா என்ற சொல்லுக்கு வயதேது? வருத்தம் என்றால் தஞ்சமடைய வேறிடமேது!!?

பயணம் 



முற்கள் நிறைந்த பாதை என்பதால் பயணத்தை முடித்து கொள்பவன் முட்டாள் . 

முற்கள் நிறைந்த பகுதியையும் பாதையாக மாற்றுபவனே புத்திசாலி.